காங்கிரஸ் மூத்த தலைவர் மோஷினா கித்வாய் மறைவு

புதுடெல்லி: காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் மோஷினா கித்வாய்(94). மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது ஆட்சி காலங்களில் ஒன்றிய அமைச்சராக பணியாற்றியவர். 1960ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மோஷினா கித்வாய், நாடாளுமன்ற தேர்தல்களில் மீரட் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இதேபோல் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த மோஷினா கித்வாய் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் காலமானார்.

Related Stories: