நிதிஷ்குமார் எம்பியாக நாளை பதவியேற்கிறார்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாளை மாநிலங்களவை எம்பியாக பதவியேற்க உள்ளார் என்று பீகார் அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி தெரிவித்தார். பீகார் அமைச்சரும் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவரான விஜய்குமார் சவுத்ரி நேற்று பேட்டியளித்தார். அப்போது பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாளை எம்பியாக பதவியேற்கிறார்.

அவர் இன்று டெல்லி செல்கிறார்.நாளை அவர் பதவியேற்பார். பீகார் முதல்வர் டெல்லியில் இருந்து வந்த பின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். அதன் பின் புதிய அமைச்சரவை அமைப்பது கூட்டணிகட்சிகளுடன் ஆலோசனைகள் நடைபெறும். புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என்றார். சமீபத்தில் ஜேடியு கட்சியில் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: