குஜராத் ஐபிஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு

அகமதாபாத்: குஜராத் ஐபிஎஸ் அதிகாரி நினாமா விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வௌியாகி உள்ளன. குஜராத் மாநிலத்தில் 1,000 உள்ளாட்சி இடங்களுக்கு வரும் 26ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் ஐபிஎஸ் அதிகாரி எம்.எல்.நினாமா விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

வடக்கு குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த நினாமா பட்டியல் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இவர் நடப்பாண்டு ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடுவார் என தகவல்கள் வௌியாகி உள்ளன.

Related Stories: