இழிவுபடுத்தும் கருத்து காங். தலைவர் கார்கே மீது ஆர்எஸ்எஸ் வழக்கு

கவுஹாத்தி: அசாமில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜ கொள்கையை விமர்சிக்கும் வகையில் பேசியது தொடர்பாக ஆர்எஸ்எஸ் போலீசில் புகார் கொடுத்துள்ளது. அசாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் நிலம்பாஜார் பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அப்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ ஆகிய இரண்டு குறித்தும் அவர் விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தாக தெரிகின்றது.

இந்நிலையில் கார்கே தங்களது அமைப்பு மற்றும் பாஜவின் சித்தாந்தத்தை ஒரு விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியதாக கூறி அவர் மீது அசாமில் இரண்டு காவல்நிலையங்களில் ஆர்எஸ்எஸ் புகார் கொடுத்துள்ளது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.அதிகாரிகள் உடனடியாக கவனிக்காவிட்டால் இதுபோன்ற அறிக்கைகள் வகுப்புவாத பதற்றங்கள் அல்லது மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

* சர்மா கருத்துக்கு பிரதமர் ஆதரவா?
அசாம் முதல்வர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணை முகமைகளுக்கு பொறுப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் சர்மா முதுமை காரணமாக பைத்தியக்காரரை போல பேசுவதாக கார்கேவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ்தள பதிவில்,‘‘காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு எதிராக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பயன்படுத்திய இழிவான மற்றும் அவமதிக்கும் பேச்சு ஏற்றுக்கொள்ளமுடியாதது. பிரதமர் மோடி இதனை ஆதரிக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories: