சட்டப்பேரவையின் ஆயுள் காலம் ஓராண்டுக்குள் முடிவடைவதால் கோவாவின் போண்டா தொகுதி இடைத்தேர்தல் ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

பனாஜி: கோவாவின் அமைச்சரும், போண்டா தொகுதி பேரவை உறுப்பினருமான ரவி நாயக் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 9ம் தேதி(இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் போண்டா தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு இரண்டு வாக்காளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், “கோவா மாநிலத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டுக்கு குறைவாகவே உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், சட்டப்பேரவையின் மீதமுள்ள பதவிக்காலம் ஓராண்டுக்கும் குறைவாக இருந்தால் இடைத்தேர்தல் நடத்துவது கட்டாயமில்லை. எனவே, போண்டா தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தனர். மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் போண்டா தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: