சசிகலா கட்சி வேட்பாளர் காரில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமலில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.5.50 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை நடத்திய விசாரணையில், சசிகலாவின் அஇபுதமமுக சீர்காழி தொகுதி வேட்பாளரான, கோமலை சேர்ந்த மாலதி, கட்சி செலவுக்காக பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் காரில் வேட்பாளர் மாலதியுடன் நிர்வாகிகள் பாலாஜி, புருஷோத்தமன், டிரைவர் சாமுவேல் ஆகியோர் இருந்தனர். உரிய ஆவணம் இல்லாததால் ரூ.5.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தலைமையிடத்து தனி துணை தாசில்தார் அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

 

Related Stories: