புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் 9ம் தேதி வரையும், என மூன்று நாட்கள் மதுபான கடைகள் அனைத்து வகையான சாராயம், கள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று இரவுடன் மதுபான கடைகள் மூடப்படும் என்பதால், மதுப்பிரியர்கள், மொத்தமாக மதுபானங்களை வாங்க முயன்றனர். இதனால், புதுச்சேரியில் நேற்று அனைத்து கடைகளும் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் மொத்தமாக மதுபானங்களை யாராவது வாங்கி செல்கிறார்களா என பறக்கும் படையிண்டர் கண்காணித்தனர். இதேபோல், வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4ம் தேதி அன்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
