சென்னை: திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஐந்தாம் ஆண்டு முடிவடையும் நிலையில், அவர் புகழ் அவனியெங்கும் எதிரொலிப்பதை காண முடிகிறது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன; காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம், முதலானவை இந்திய நாடு கடந்து, அயல் நாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.
முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கொரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல் மழை வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசின் பாராமுகம், அது அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் காத்து எல்லாருக்கும் எல்லாம் என்பதைத் தத்துவமாகவே வடித்து திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார்கள்.
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என பாராட்டப்பட்டபோது, எனக்கு புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை என்று கூறிப் பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! இன்று தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர்; மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்; பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன.
இத்தனைக்கும் மேலாக ஒன்றிய அரசே திராவிட அரசைப் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும் நமக்கும் பெருமையையும். பெருமிதத்தையும் ஏற்படுத்தும். எராளமானஅந்த ஒன்றிய அரசின் பாராட்டுப் பட்டியலில் இதோ சில… ISO 27001:2013 சர்வதேச தர சான்றிதழ் — மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (3.11.2021), மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த முதல் மாநிலம் என தேர்வு — ஒன்றிய அரசு விருது (6.12.2021), மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது — ஒன்றிய சமூகநீதி, அமைச்சகம் (8.12.2021 மற்றும் 13.12.2021), சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம் (29.3.2022), சிறந்த ஏற்றுமதியாளர் விருது — துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார் (25.4.2022),
சிறப்பாக செயல்பட்ட 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் விருது (11.5.2022), மகப்பேறு சிக்கல்கள் கண்டறிதலில் தேசிய முதலிடம் —ஒன்றிய விருது (27.6.2022), விருதுநகர் மாவட்டம் — குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு தேசிய முதல் பரிசு (1.7.2022), சுகாதாரத்தில் தேசிய அளவில் மூன்றாம் இடம் — ஜனாதிபதி விருது (2.10.2022), சுத்தம் பராமரிப்பில் தேசிய அளவில் மூன்றாவது பரிசு (2.10.2022), ஜல்சக்தி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதற்கு தேசிய விருது (2.10.2022) தஞ்சாவூர் மாவட்டம் — சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்தி மாவட்டம் (13.12.2022), சர்வதேச சுற்றுலா சந்தையில் சிறந்த சுற்றுலா அமைச்சகம்— பட்வா சர்வதேச பயண விருது (8.3.2023),கடற்கரை முகப்பு மேம்பாட்டிற்கு ஒன்றிய சுற்றுலா அமைச்சக விருது (28.3.2023) காசு நோய் ஒழிப்பில் 9 மாவட்டங்களுக்கு விருது — வாரணாசி (6.4.2023),
காகிதமில்லா சட்டமன்ற திட்டத்திற்கு பாராளுமன்ற விவகார அமைச்சகம் விருது (3.7.2023) உலக உணவு தின விழாவில் சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்கு விருது (20.11.2023), ஸ்ரீவைகுண்டம் அணைக்கு சர்வதேச நீர்ப்பாசன விருது (21.11.2023), குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு தேசிய மூன்றாம் இடம் (30.1.2024), தர்மபுரி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முதல் பரிசு — அமித்ஷா வழங்கினார் (14.8.2024), ஐ.நா. விருது — மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு (2024), தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு சிறந்த வங்கி சேவை விருது — அமித்ஷா வழங்கினார் (26.11.2024), இந்தியா வர்த்தகக் கண்காட்சியில் மூன்றாம் விருது (29.11.2024),திருவாணூர் காவல் நிலையம் — 2024ம் ஆண்டு சிறந்த காவல் நிலையம் விருது, சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை தேசிய விருது (25.4.2025).
இவை தவிர, தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களும் திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனை பாராட்டி ஏராளமான விருதுகள் வழங்கியுள்ளன. திராவிட மாடல் அரசு காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மகத்தான சாதனைகளுக்காக இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் பாராட்டும் வகையில், ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுப் பட்டியலை காணும்போது திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் என பலரும் மகுடம் சூட்டுவது நமது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.
