உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழின்றி வணிகம் செய்தால் ₹5,000 அபராதம்

தர்மபுரி, பிப்.19: தர்மபுரியில் நகர மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை சார்பில், உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார். நகர வர்த்த சங்க தலைவர் உத்தண்டி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சேகர், தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் முன்னேற் சங்க பொருளாளர் வடிவேல், ரோட்டரி மிட்டவுன் தலைவரும், வர்த்தக பிரமுகருமான வெங்கடேஷ் உள்ளிட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், பேக்கிரி மற்றும் ஒட்டல் சங்கம், நுகர்வோர் சங்க பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுமதி பேசுகையில், ‘உணவு பொருள் தயாரிப்பாளர்கள், உணவகங்கள், மளிகை மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகள், பேக்கரிகள், இறைச்சி கடைகள், துரித உணவகங்கள், டீ மற்றும் பெட்டி கடைகள், நடமாடும் உணவகங்கள், மீன், கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், கோயில் அன்னதானம், அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் இன்றி வணிகம் செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’ என்றார்.

Related Stories: