காயல்பட்டினத்தில் நூல் வெளியீட்டு விழா

ஆறுமுகநேரி, மார்ச் 31: தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் மாற்றுத்திறனாளி அணி மற்றும் மாதிஹூர் ரசூல் பெண்கள் மதரசா சார்பில் மவுலவி அபுதாஹிர் ஆலிம் எழுதிய அவ்லியாக்களின் அகமியம் அறிவோம் நூல் வெளியீட்டு விழா, கற்புடையள்ளி வட்டம் முஹிய்யித்தீன் கடற்கரை பள்ளியில் நடைபெற்றது. முகம்மது ஷா ஆலிம் தலைமை வகித்தார். கடற்கரை பள்ளித் தலைவர் அப்துர் ரஹ்மான், செயலாளர் ஈஷாக் லெப்பை, கவுரவ ஆலோசகர் சதக்கத்துல்லா, ஜிலானிப்பள்ளி லெப்பப்பா பண்ணை தலைவர் ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறைமறை என்னும் வேத வசனங்களை முகம்மது ஷா ஆலிம் ஓதினார். இஸ்லாமிய கீதத்தை பாலப்பா எவ்னி அப்துல் காதர் பாடினார். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாற்றுத்திறனாளி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் காயல் ஜெஸ்முதீன் வரவேற்றார். முகம்மது அன்வரி ஆலிம் வாழ்த்திப் பேசினார். நூலின் முதல் பிரதியை முகம்மது அன்வரி ஆலிம் வெளியிட ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக் கொண்டார். பாலப்பா எவ்னி அப்துல் காதர் நன்றி கூறினார்.

Related Stories: