திருவாரூர், மார்ச் 31: திருவாரூர் மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தியையொட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (31ந் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்த்திற்கும் விடுமுறைதினமாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் மேற்படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல் 3 பெற்ற மதுக்கூடங்களையும் மூட வேண்டும் எனவும், இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
