திருச்சி மாவட்ட 9 தொகுதிகளில் ஒரேநாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்

 

திருச்சி, மார்ச் 31: திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் நேற்று அமைச்சர் கே.என்.நேரு உட்பட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் ஏப்.6ம் தேதி வரை (விடுமுறை மார்ச். 31, ஏப். 1, 3, 5 தவிர்த்து) வேட்புமனு தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை காலை 11 மணி தொடங்கி பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஏப். 7ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு, ஏப். 9ம் தேதி வேட்பு மனுக்கள் திறும்ப பெறலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று வரை வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்டது. அதன் விவரம், மணப்பாறை தொகுதியில் – நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அருணகிரி (36) வேட்புமனு தாக்கல் செய்தார், ரங்கம் தொகுதியில் – புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தர்மராஜ் (25) வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருவானைக்காவலை சேர்ந்த சக்திவேல் சக்திவேல்(47) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருச்சி மேற்கில் திமுக சார்பில் அமைச்சர் கே.என். நேரு, சுயேட்சை வேட்பாளர்கள் சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த ராஜேந்திரன் (47), திருச்சியை சேர்ந்த வாசுதேவன் (63), நாம் தமிழர் கட்சி சார்பிud திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (40) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர், திருச்சி கிழக்கில் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி (38) வேட்புமனு தாக்கல் செய்தார். திருவெறும்பூரில் சாமானிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜோசப் (53), சுயேட்சை வேட்பாளர்கள் யேசுராஜ் (66), நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜேஷ் (46) ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். லால்குடியில் – தமிழக மக்கள் நல கட்சியை சேர்ந்த யேசுதாஸ் (59) நாம் தமிழர் கட்சி சேர்ந்த மதன் (30), சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் (63) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மணச்சநல்லூரில் திமுக சார்பில் எம்எல்ஏ கதிரவன் (51), ஆனந்தலட்சுமி (48), நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி (31) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முசிறி – சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் மலர்மன்னன், நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி (37) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். துறையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசல்யா (34) வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வகையில் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நேற்றை தேதியில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 18 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 23 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஆண்கள்
18
பெண்கள்
5

 

Related Stories: