100% வாக்களிக்க கல்லூரி மாணவிகள் உறுதிமொழி: சீர்காழி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களை பொதுப்பார்வையாளர் ஆய்வு

 

சீர்காழி, மார்ச் 31: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, பெருந்தோட்டம், ராதாநல்லூர், மணிக்கிராமம், தென்னம்பட்டினம், கீழமூவாக்கரை, மாதாணம், தாண்டவக்குளம் மற்றும் கொடக்கரைமூலை ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சீர்காழி சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர் ரோனங்கி குர்மநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பெருந்தோட்டம், ராதாநல்லூர், மணிக்கிராமம், தென்னம்பட்டினம், கீழமூவாக்கரை, மாதானம், தாண்டவக்குளம் மற்றும் கொடக்கரைமூலை ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சீர்காழி சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர் ரோனங்கி குர்மநாத், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தேர்தல் நடத்தை விதிகள் 15.03.2026 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தொடக்கம் நாள் 30.03.2026 ஆகும். வாக்கு பதிவு நாள் 23.04.2026, தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும் நாள் 6.5.2026 ஆகும். தேர்தல் பொது பார்வையாளர் வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று சீர்காழி வட்டம், பெருந்தோட்டம், ராதாநல்லூர், மணிக்கிராமம், தென்னம்பட்டினம், கீழமூவா்க்கரை, மாதாணம், தாண்டவக்குளம் மற்றும் கோடக்கரைமூலை ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு, குடிநீர், கழிவறை, சாய்தள வசதிகள், மின்இணைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நிலையான கண்காணிப்புக்குழு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: