புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 6ந் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

 

புதுக்கோட்டை, மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 6ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் 6.04.2026 அன்று வழக்கம் போல் இயங்கும் அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் மேற்படி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டம்,

குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை முத்துமரியம்மன் திருக்கோயில் திருவிழா 06.04.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 06.04.2026 என்பதால் அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் மேற்படி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

 

Related Stories: