வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

 

வேதாரண்யம், மார்ச் 31: வேதாரண்யம் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026 ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% நேர்மையாக வாக்களிப்போம் என்ற வாசகத்துடன் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வேதாரண்யம் தாசில்தார், சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் வருவாய்துறை அலுவலர்கள் நேர்மையாக 100% வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Related Stories: