மண்டைக்காடு அருகே கல்லூரி மாணவி மாயம்

குளச்சல், மார்ச் 31: மண்டைக்காடு அருகே மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். மீன்பிடி தொழிலாளி. அவரது மகள் அசினா (19). அப்பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழிகளை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்ைத குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories: