சுற்றுலா வந்தவரிடம் ரூ.1.10 லட்சம் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை ஆந்திராவில் இருந்து வேலூருக்கு

வேலூர், மார்ச் 24: ஆந்திராவில் இருந்து வேலூருக்கு சுற்றுலா வந்தவரிடம் ரூ.1.10 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் வேலூர் நேஷனல் சர்க்கிள் பகுதியில் பறக்கும் படை நிலை அலுவலர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. காரில் இருந்த பணத்திற்கு விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திரா மாநிலம் குண்டூர், ராமலிங்கேஸ்வர் பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் பெண்ணா மலகொண்டையா மற்றும் 4 பேரும் வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படை அலுவலர் ஜெயந்தி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார்.

Related Stories: