பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாக். மாஜி ராணுவ தளபதி மரணம்

ஐதராபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் பத்தாவது தளபதியாக பணியாற்றிய கமர் ஜாவேத் பஜ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் 10வது தலைமைத் தளபதியாக கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கமர் ஜாவேத் பஜ்வா பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் கடந்த 2019ம் ஆண்டு பாலக்கோட் வான்வழித் தாக்குதல் போன்ற இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவியது. இருப்பினும், கடந்த 2021ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கமர் ஜாவேத் பஜ்வா தனது வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராகவும், அதேசமயம் சர்ச்சைக்குரியவராகவும் கருதப்பட்ட ஒருவரின் அத்தியாயம் அவரது மறைவின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories: