ஐரோப்பாவில் 12 டன் சாக்லேட் லாரியுடன் கடத்தல்

 

ஜெனீவா: இத்தாலியில் இருந்து போலந்து நோக்கி கொண்டு செல்லப்பட்ட 12 டன் சாக்லேட் லாரியுடன் கடத்தப்பட்டுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் பிரபலமான கிட்காட் சாக்லேட்கள் லோடுடன் லாரி ஒன்று இத்தாலி நாட்டில் இருந்து போலந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டது. அதில் 12 டன் எடை கொண்ட 4,13,793 சாக்லேட்கள் இருந்தன. அனைத்தும் புதிய வகை சாக்லேட்களாகும். இத்தாலியில் இருந்து போலந்து வரையிலும் பல்வேறு பகுதிகளுக்கு சாக்லேட் சப்ளை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட இந்த லாரி நடுவழியிலேயே கடத்தப்பட்டது.

லாரி குறித்தும் டிரைவர் குறித்தும் எந்த தகவலும் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். இது திட்டமிட்ட கடத்தல் சம்பவம் என்றும், விரைவில் ஈஸ்டர் பண்டிகை நெருங்குவதால், ஐரோப்பாவில் இப்பண்டிகை காலத்தில் கிட்காட் சாக்லேட்கள் கிடைக்காமல் போகலாம் என நெஸ்லே வருத்தம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் சமீபகாலமாக இத்தகைய சரக்கு லாரிகள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது.

Related Stories: