கடமலை-மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம் சாகுபடி

 

வருசநாடு, மார்ச் 29: கடமலை-மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு சோளம் மக்காச்சோளம் சாகுபடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை, சிங்கராஜபுரம், முறுக்கோடை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளது. இதில் மொச்சை, கம்பு, சோளம் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பெய்துவரும் சாரல் மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக சாரல் மழை குறைவாக இருந்தது. ஆகவே மானாவாரி பயிர்கள் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே தற்போது தொடர்ந்து சாரல் மழை காரணமாக பயிர்கள் வளர்ச்சியில் நன்றாக உள்ளது’’ என்றனர்.

Related Stories: