ஸ்ரீநகர்: லடாக்கில் நேற்று மதியம் ஜீரோ பாயிண்ட் மற்றும் மினிமார்க்கிற்கு இடையிலான பகுதியில் பல பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டன. இந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். பனிச்சரிவு காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
குறைந்தது 15 வாகனங்கள் பனிக்கு அடியில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ புதைந்துள்ளது. அங்கு காவல்துறை, ராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அடங்கிய ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
