கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி மாவட்ட சிஐடியூ ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கலாவதி தலைமை வகித்தார். குட்டியப்பன், ராஜேந்திரன், சங்கர், ராஜா முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் செல்வம், சிஐடியூ மாநில செயலாளர் நாகராசன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில துணை தலைவர் அங்கம்மாள், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், அம்மா உணவகத்தில் பணி நிறுத்தம் செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், கலெக்டரின் உத்தரவுபடி குறைந்தபட்ச ஊதியம் ₹392 வழங்க வேண்டும். உணவு தயாரிக்க தரமான பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும். தொழில் அமைதியை சீர்குலைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: