திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது கிரிமினல் குற்றமில்லை: அலகாபாத் நீதிமன்றம் கருத்து

பிரயாக்ராஜ்: திருமணமான ஆண் வயது வந்த பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருப்பது கிரிமினல் குற்றமாகாது என அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த நேத்ரபால் என்பவர் திருமணமானவர். இவர் தன் 18 வயது மகளுடன் உறவில் இருப்பதாக அந்த பெண்ணின் தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நேத்ரபாலை கைது செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால், அந்த பெண் நான் வயது வந்தவர், எனது சொந்த விருப்பத்தின்படியே நேத்ரபாலுடன் லிவ்-இன் உறவில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும், என் குடும்ப உறுப்பினர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜே.ஜே.முனீர் மற்றும் நீதிபதி தருண் சக்சேனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களை கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், “திருமணமான ஆண் வயது வந்த பெண்ணின் சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமல்ல. அந்த நபர் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் தொடர முடியாது. சமூக கருத்துகளோ அல்லது தனிப்பட்ட ஒழுக்கநெறிகளோ சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது” என தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜோடிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மறு உத்தரவு வரும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

Related Stories: