ரூ. 8.2 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக, காலவரையறை கொண்ட பத்திரங்கள் வாயிலாக ரூ. 8.2 லட்சம் கோடியைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

2026-27 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தச் சந்தைக் கடன் பெறுதல் ரூ. 17.20 லட்சம் கோடியாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இதில் ரூ. 8.20 லட்சம் கோடி (51 சதவீதம்) முதல் அரையாண்டில் கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: