கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தி கட்டாய பாடம் இல்லை

பெங்களூரு: கர்நாடகாவில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் இந்தியை கட்டாயமாக்கக்கூடாது என்றும், மதிப்பெண் பட்டியலிலிருந்து நீக்குமாறும் கன்னட அமைப்புகள் சமீபத்தில் மாநில அரசிடம் வலியுறுத்தின. இந்நிலையில், மாநில அரசு இந்தியை கட்டாயப் பாடத்திலிருந்து விருப்பப் பாடமாக மாற்றியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடந்துவரும் நிலையில், 3வது மொழியான இந்தி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளில் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ஏ,பி,சி,டி என கிரேடு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 625லிருந்து 525 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் மூன்றாவது மொழித் தேர்வை எழுதுவது கட்டாயமாகும்.

Related Stories: