புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் செவ்வாயன்று இரவு டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக மருத்துவர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் சோனியா இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எழுந்து நடப்பதாகவும், காலை உணவை உட்கொண்டதாகவும் தெரிவித்த அவர், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
