இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்காததால், அவர்கள் உழவர்கரை, தட்டாஞ்சாவடி என இரு தொகுதியில் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் மனு தாக்கல் செய்த சிபிஐ மாநில செயலாளர் சலீம் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் உழவர்கரை தொகுதியில் மட்டும் இந்திய கம்யூ., தனித்து போட்டியிடுகிறது. தற்போது உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில் சிவசங்கர் எம்எல்ஏ, இந்திய கம்யூ., சார்பில் முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், விசிக சார்பில் புஷ்பலதா என ஒரே கூட்டணியை சேர்ந்த 3 பேர் தனித்து களத்தில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த தொகுதியும் ஒதுக்காததால் முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, பாகூர், திருபுவனை ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் முத்தியால்பேட்டை, பாகூர் ஆகிய இரு தொகுதிகளில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது லாஸ்பேட்டையில் காங்., சார்பில் வைத்தியநாதன், சிபிஎம் சார்பில் முன்னாள் செயலாளர் ராஜாங்கம் ஆகியோரும், பாகூர் தொகுதியில் திமுக சார்பில் அங்காளன் எம்எல்ஏ, காங்., சார்பில் வேலு, சிபிஎம் சார்பில் தட்சணாமூர்த்தி ஆகியோரும் ஒரே கூட்டணியில் தனித்து போட்டியிடுகின்றனர். இது இந்தியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
