காங்கிரசில் இருந்து விலகிய அசாம் எம்பி ராஜினாமா ஏற்பு: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் இணைந்த அசாம் எம்பி பிரத்யுத் போர்டோலோயின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அசாம் எம்பியான பிரத்யுத் போர்டோலோய், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜ கட்சியில் இணைந்தார். நாகோன் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக இருந்தார். எம்பியாவதற்கு முன் அசாமில் மறைந்த தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கடந்த 17ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரத்யுத் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜவில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த அடுத்த நாளே சட்டமன்ற தேர்தலில் பிரத்யுத் போட்டியிடுவார் என்றும் அவர் டிஸ்பூர் தொகுதியில் இருந்து வேட்பாளராக போட்டியிடுவார் என்று பாஜ அறிவித்தது. இந்த நிலையில்,பிரத்யுத் போர்டோலோயின் எம்பி பதவி ராஜினாமாவை ஏற்று கொண்டு விட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார்.

Related Stories: