கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் எஸ்சி என்று உரிமைக்கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ போதகரான சிந்தாதா ஆனந்த் பால், என்பவர் சிலருக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சிந்தாதா ஆனந்த் பால், கிறித்தவ மதத்திற்கு தழுவியதால் அவரால் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி கே மிஸ்ரா மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு: இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்.

குறிப்பாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டு அதனை தீவிரமாகப் பின்பற்றி வரும் ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்க முடியாது என்று முன்னதாக ஆந்திர உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. கிறிஸ்தவத்துக்கு மாறிய பின்பு ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக இருக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: