படப்பிடிப்பின் போது டைரக்டர் என்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்: கும்பமேளா மோனாலிசா பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா. இதன் பிறகு ஏராளமான விளம்பரப் படங்களிலும், பின்னர் சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து பர்மான் கான் என்பவரை இவர் திருமணம் செய்தார். தற்போது இவர் கொச்சியில் கணவருடன் வசித்து வருகிறார்.

மோனாலிசா பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா இயக்கிய ஒரு படத்தில் நடித்தார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்பின் போது பலமுறை தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் மோனாலிசா இதுகுறித்து நிருபர்களிடம் கூறியது:

டைரக்டர் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்புத் தளத்தில் வைத்து பலமுறை என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். எனக்கு 18 வயது ஆவதற்கு முன் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து அப்போது என்னுடைய குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் முதல் படம் தானே என்று கூறி அந்த விஷயத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. டைரக்டர் சனோஜ் மிஸ்ரா மீது இப்போது புகார் கொடுப்பது குறித்து நான் ஆலோசித்து வருகிறேன் என்றார்.

Related Stories: