ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு

புதுடெல்லி: கடந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார். அதன் பிறகு சில மாதங்களில் பதவியை தனது ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகி உள்ளார். இதையடுத்து, அவர், பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், நிதிஷ்குமாரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கட்சி தலைவராக நிதிஷ்குமார் 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: