பூத்தட்டு விழா

 

சிங்கம்புணரி, மார்ச் 24: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் பால்குடங்கள், பூத்தட்டுகளை எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு மலர் அபிஷேகம், பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் கரிசல்பட்டி, சேர்வரன்பட்டி, தேனாம்பட்டி, தேத்தாம்பட்டி, நல்லவன் பட்டி, பள்ளப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.

Related Stories: