தக்கலை அருகே பைக்கில் இருந்த மூங்கில் குத்தி பெண் படுகாயம்

 

குளச்சல், மார்ச் 24: தக்கலை அருகே கேரளபுரத்தை சேர்ந்தவர் அனீஷ் (29). இவரது மனைவி
அர்ச்சனா (26). சம்பவத்தன்று அனீஷ் தனது ஸ்கூட்டரில் மண்டைக்காடு வந்தார். அவருடன் அர்ச்சனாவும் வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
மண்டைக்காடு – நடுவூர்க்கரை சாலை தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு ஒருவர் நிறுத்தி இருந்த பைக்கை திடீரென இயக்கினார். இந்த பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நண்பர் மூங்கில் கழியை தோளில் வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூங்கில் கழி ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த அர்ச்சனா மீது பட்டதில் படுகாயம் அடைந்தார். மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: