காற்றாடி நூல் அறுத்து வக்கீல் படுகாயம்

குன்றத்தூர், மார்ச் 24: சென்னை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் முகம்மது ராஷித்(26), சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கிலாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அண்ணனுடன் பைக்கில் மதுரவாயல் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.‌ அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காற்றாடி நூல் முகமது ராஷித்தின் முகத்தில் அறுத்தது. இதில் அவரின் மூக்கு, மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வானகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது ராஷித்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், வானகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: