வாடிப்பட்டி, மார்ச் 24: சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் உதயா (23). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர், மற்றொரு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவரை தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அச்சிறுமியை வழிமறித்து காதலிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார். இதன் பேரில் உதயா மீது போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
