மதுரை, மார்ச் 24: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுப் பகுதிகளிலும் அரசு உத்தரவுப்படி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 31ம் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநகராட்சி செய்திக்குறிப்பில், ‘வரும் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
