100% வாக்களிக்க தயாராகுங்கள் செல்பி பாயிண்ட் அமைத்து ஒட்டன்சத்திரத்தில் விழிப்புணர்வு

 

ஒட்டன்சத்திரம், மார்ச் 24: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக
நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், சத்திரப்பட்டி பேருந்து நிலையம், கள்ளிமந்தயம் பேருந்து நிலையம், அம்பிளிக்கை கல்லூரி, ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 இடங்களில் தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா 100 சதவீதம் வாக்களிக்க தயாராகுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் ஆணையாளர் ஸ்வேதா, பொறியாளர் சுப்ரமணியபிரபு, மேலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி செல்பி எடுத்து கொண்டனர்.

Related Stories: