குஜிலியம்பாறையில் அரசு பள்ளி ஆண்டு விழா

 

குஜிலியம்பாறை, மார்ச் 24: குஜிலியம்பாறை அருகே இல.செட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்நது. இடைநிலை ஆசிரியை கீதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் மாரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம் மற்றும் தேச தலைவர்கள் பற்றியும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசினர். பின்னர் பராம்பரிய கலையான தேவராட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆடி அசத்தினர். தொடர்ந்து பேச்சு, பாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் யசோதா, வெங்கடேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் அமுதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் காஞ்சனா, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அன்புச்செழியன், பத்மாவதி, ஜெயந்தி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி செய்திருந்தனர்.

Related Stories: