காரில் கொண்டு சென்ற ரூ.1.97 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 24: பொம்மிடி செக்போஸ்டில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.97 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினர், ராமமூர்த்தி நகர் செக்போஸ்டில் வேப்பாடி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமமூர்த்தி நகர் பகுதியில் இருந்து பொம்மிடி நோக்கிச் சென்ற ரேகடஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூடாமணி (40) என்பவரின் காரை சோதனை செய்தபொழுது, ஆவணமின்றி ரூ.1,97,800 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதியிடம் ஒப்படைத்து, மூடி முத்திரையிட்டு அரசு கருவூலத்தில் சேர்த்தனர்.

Related Stories: