குக்கருடன் மல்லுக்கட்டும் டாக்டர்

 

தேஜ கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் பாஜ கேட்பதால் குழப்பம் நீடிக்கிறது. இதேபோல்தென் மாவட்டங்களில் ஒருசில தொகுதிகளை தங்களுக்கு வேண்டும் என்று எடப்பாடியிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாங்குநேரி, ஓட்டப்பிடாரம் தொகுதிகள் தங்களுக்கு கட்டாயம் வேண்டும் என்பதில் கறாராக உள்ளார். நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்.

இதேபோல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் போட்டியிட போவதாகவும், அவரும் இப்போதே தேர்தல் பணியில் களமிறங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் அதிமுக கூட்டணியில் இணைய உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் ஓட்டப்பிடாரம் தொகுதியை கிருஷ்ணசாமி கேட்பதாக தெரிகிறது. ஆனால் நாங்குநேரி, ஓட்டப்பிடாரம் தொகுதியை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் டிடிவி தினகரன் கறாராக உள்ளார். இதனால் அமமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

Related Stories: