தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் கனிமொழி எம்பி தேர்தல் பிரசாரம்

பென்னாகரம், பிப்.16:  தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகளில், மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” நிகழ்ச்சிகளில் 17ம் தேதி பங்கேற்று பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுகிறார். 17ம் தேதி தர்மபுரியிலிருந்து புறப்பட்டு வரும் அவருக்கு, காலை 07.30 மணிக்கு பென்னாகரம் ஒன்றியம், நாகதாசம்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து காலை 8.15மணிக்கு ஏரியூர் ஒன்றியம், நாகமரையில் இருந்து பண்ணவாடி இடையே ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டிய இடத்தை பார்வையிடுகிறார்.

காலை 9மணிக்கு ஏரியூரில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 10மணிக்கு பென்னாகரத்தில் வேனிலிருந்து பிரசாரம், காலை 11 மணிக்கு கடமடையில் மகளிர் குழுக்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிற்பகல் 2.30 மணிக்கு பாப்பாரப்பட்டியில் நெசவாள, வணிகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 3.30 மணிக்கு எர்ரனள்ளி தளவாய்அள்ளி புதூரில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 3.45மணிக்கு கரகூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடி, மாலை 4-30மணிக்கு மல்லாபுரத்தில் விவசாயிகளை சந்தித்துவிட்டு, மாலை 5.15 மணிக்கு மாரண்டள்ளியில் வேனிலிருந்தபடி பொதுமக்களிடம் பிரசாரம் செய்கிறார்.

அதனை தொடர்ந்து கொலசனஅள்ளியில், மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு, இரவு 6மணிக்கு பிக்கனஅள்ளியில் நடைபெறும் வாக்குசாவடி முகவர்களின் கூட்டத்தில் சிறப்புரையாற்றி, அன்றைய பயணத்தை நிறைவு செய்கிறார். எனவே, இந்நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: