கோடைகாலம் துவங்க உள்ளதால் குளித்தலையில் விற்பனைக்கு வந்துகுவிந்த தர்பூசணி பழங்கள்

குளித்தலை, பிப்.12: தமிழகத்தில் தற்போது மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி முடிவுறும் நிலையில் கோடை காலம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் பொதுமக்கள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை தயார் படுத்திக்கொள்ள இயற்கையான பழங்களில் ஒன்றான தர்பூசணி பழம் திண்டிவனம் பகுதிகளிலிருந்து வந்து குளித்தலை பெரிய பாலம் பகுதியில் இறங்கியுள்ளது. இந்த தர்பூசணி பழத்தின் பயன்கள் குறித்து குளித்தலையை சேர்ந்த முதியவர் ஒருவர் கூறியதாவது: இந்த தர்பூசணி பழம் கோடைகாலத்தில் மனிதனின் உடலில் உள்ள சூட்டை தணிக்கும். தண்ணீர் தாகத்தைப் போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி புது ரத்தத்தை உருவாக்கும். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு பழமாக தர்பூசணி இருந்து வருகிறது. அதனால்தான் கோடைகாலத்தில் இளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தப் பழத்தை ஜூஸ் ஆகவும் பருகலாம். அதனால் இந்த வருடம் திண்டிவனத்திலிருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ தர்பூசணி விலை 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: