தமிழக பொறுப்பு கவர்னர் இன்று பதவியேற்பு

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக கேரளா மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவி ஏற்கிறார். தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கேரளா மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக பொறுப்பு கவர்னராக அறிவிக்கப்பட்டார்.

கொச்சியிலிருந்து நேற்று இரவு 8.45 மணியளவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கவர்னர் வருகை நேரம் மாற்றப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு 12.15 மணியளவில் கொச்சியில் இருந்து, சென்னை வந்தார். விமான நிலையத்தில், கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், காரில் புறப்பட்டு, கிண்டி ராஜ் பவனுக்கு சென்றார். இன்று பகல் 12.30 மணியளவில், கிண்டி ராஜ் பவனில், தமிழ்நாடு பொறுப்பு கவர்னராக, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

Related Stories: