காரிமங்கலத்தில் முதல்வருக்கு வரவேற்பு

காரிமங்கலம், பிப்.11: திருப்பத்தூரிலிருந்து-கிருஷ்ணகிரி வழியாக, சேலம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில்,  புதிதாக அமைக்கப்பட்ட வராகி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், சப் கலெக்டர் பிரதாப், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் யசோதா மதிவாணன், யூனியன் சேர்மன் சாந்தி பெரியண்ணன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், மத்திய கூட்டுறவு இயக்குனர் பொன்னுவேல், பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன், நிர்வாக இயக்குனர் வித்யா ரவிஷங்கர் இயக்குனர்கள் டாக்டர் சந்திரமோகன், சசிமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: