புதுப்பாளையம் ஒன்றியத்தில் 99.78 லட்சத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டி முடித்த அரசு கட்டிடங்கள் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

செங்கம், மார்ச் 9: புதுப்பாளையத்தில் ஒன்றியத்தில் ரூ.99.78 லட்சத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டி முடித்த அரசு கட்டிடங்கள் எம்எல்ஏ திறந்து வைத்தார். புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மேல்நாச்சிபட்டு, மேல்குப்பம், உண்ணாமலைபாளையம், இறையூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.99.78 லட்சத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சி.சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் கவுன்சிலர்கள் முனியப்பன், சுதாகர், வாசுகி பரமசிவம், முன்னாள் தலைவர் சுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஏஞ்சலின் சிந்தியா ராணி அனைவரையும் வரவேற்றார்.

Related Stories: