பிளஸ்1 தேர்வில் 3,400 பேர் ஆப்சென்ட்

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வில் 3,400 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. தமிழகத்தில் மேனிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் 2ம் தேதி தொடங்கின. அதில் பிளஸ் 1 வகுப்புக்கான அரியர் தேர்வுகள் 3ம் தேதி தொடங்கியது. முதல்நாள் தமிழ் மொழிப்பாடத் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மொத்தம் 7 ஆயிரத்து 15 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களில் பள்ளி மாணவர்கள் 4924, தனித் தேர்வர்கள் 2091 பேர் அடங்குவர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 2895 பேரும், தனித் தேர்வர்கள் 508 பேரும் என மொத்தம் 3,403 பேர் நேற்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, பிளஸ் 1 தேர்வுகள் 9ம் தேதி நடக்க இருக்கிறது. அதில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடத் தேர்வுகள் நடக்க இருக்கின்றன.

Related Stories: