கொத்தங்குடியில் விஷ வண்டுகள் ரசாயன பொடி தூவி அழிப்பு

கீழ்வேளூர், மார்ச் 4: கொத்தங்குடியில் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் ரசாயன பொடிகளை தூவி அழித்தனர். நாகப்பட்டினம் மாவ ட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள கொத்தங்குடி மெயின் ரோட்டில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஒரு புளிய மரத்தில் விஷ வண்டு கதண்டு கூடு கட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இதனால் பயந்து நடுங்கிய பொதுமக்கள் விஷ வண்டுகளை அழிக்ககோரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்து வந்த தலைஞாறு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை ரசாயன பொடிகள் தூவி தீ வைத்து அழித்தனர். இதனால் நிம்மதியடைந்த பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

Related Stories: