தூத்துக்குடியில் இருவர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி, மார்ச் 3: தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரபாண்டி (21) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதுபோல தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில், தூத்துக்குடியை சேர்ந்த முருகன் (எ) கட்ட முருகன் (31) என்பவர் கைது செய்யப்பட்டார்.இவர்களது தொடர் குற்றச் செயல்களை கருத்தில் கொண்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இருவரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் சிறையிலடைக்க சிப்காட் மற்றும் தருவைக்குளம் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்பி மதன் பரிந்துரை செய்தனர். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் இளம்பகவத் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுந்தரபாண்டி, கட்ட முருகன் ஆகியோரை குண்டர் தடுப்பு காவலில் அடைப்பதற்கான உத்தரவு நகலை போலீசார் பாளை. மத்திய சிறையில் வழங்கினர்.

Related Stories: