நாகர்கோவில், மார்ச் 3: அருமனையில் சாலோம் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் அருமனை போலீஸ் நிலையத்திற்கு 5 விபத்து தடுப்பு வேலிகள் (பேரிகார்டு) நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராஜ் பவிதா பெரின் விபத்து தடுப்பு வேலிகளை அருமனை சப் இன்ஸ்பெக்டர் சுஜினிடம் வழங்கினார். இதில் மருத்துவமனை மேலாளர் ஜெயக்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுனில் குமார் கலந்து கொண்டனர்.
