அரியலூர் மாவட்டத்தில் முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கல்

அரியலூர்,மார்ச் 2: அரியலூர் மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் நாளை, நாளை மறுநாள் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 2026 மாதத்தில் இன்றும், நாளையும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் இந்த தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: